Thursday, 3 June 2021

அஷ்ட கர்மாக்கள் என்னென்ன வேலைகளை செய்கின்றன

 


சென்ற பதிவில் அஷ்ட கர்மா என்றால் என்ன? என்பதையும், அதன் பெயர்களையும் பார்த்தோம். இன்றைய பதிவில் அந்த அஷ்ட கர்மாக்கள் என்னென்ன வேலைகளை செய்கின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தை துல்லியமாக ஆராய்வதன் மூலம், அவருக்கு இந்த பிறவியில் அஷ்ட கர்மாக்கள் கை கூடுமா? மற்றும் அஷ்ட கர்மாக்களால் அவருக்கு நன்மைகள் உண்டாகுமா எனவும் அறியலாம். இந்த அஷ்ட கர்மாக்கள் என்பது உலக மக்களின் நன்மைக்காக உருவாக்கி அதை நமது சித்தர்களால் அருளப்பட்டவை. எல்லா மதங்களும் தனக்காக தோற்றுவித்தவை. அது தானாக தோன்றியது அல்ல. இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் வேதம் என்பது முழு உரிமையாகும். இந்த வேதம், யோகம், தியானம், தவம், மந்திரங்கள் போன்றவை அனைவருக்கும் சமம். வேதம் என்பது உலக பொது மறையாகும்.

சரி நாம பதிவிற்கு வந்துவிடலாம்.

அஷ்ட கர்மாக்கள் என்னவென்று பார்க்கும் முன் அதைப்பற்றிய முழு விளக்கத்தையும் நாம் ஆராய வேண்டும். காரணம் என்னவென்றால் நாம் பயிற்சி செய்யும்போது அதன் அவசியமும், காரணம் மற்றும் வரலாறும் தெரிந்து கொண்டால், நாம் கற்றுக் கொள்வது எளிதாகிவிடும்.

அதாவது ஒரு மாதத்தை 30 நாட்கள் என்று எடுத்துக்கொள்வோம். அதை இரண்டாகப் பிரித்தால் பதினைந்து ஆகும். பதினைந்து என்பதை அமாவாசை அல்லது பெளர்ணமி என்று அழைக்கிறோம். பொதுவாக அமாவாசை ஆண்களையும், பெளர்ணமி பெண்களையும் குறிக்கும். பெளர்ணமியில் பொதுவாக குளிர்ச்சியான ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அனைவரும் சாதரனமாக காணலாம். அமாவாசை காலங்களில் பெரும்பாலும் மனம் அமைதி அற்ற நிலையிலேயே காணப்படும். ஆனால் ஒரு சிலர் பூஜைக்குரிய வேலைகளை அமாவாசைகளில் துவங்குவது உண்டு. இந்த அஷ்ட கர்மா யோகத்தை ஆண், பெண் என பாகுபாடின்றி இருவரும் பயிற்சி செய்யலாம். இந்த யோகத்தில் ஆண்களைவிட பெண்களே மிக விரைவில் முன்னேற்றம் அடைகின்றனர். காரணம் பெண்கள் இயல்பாகவே பிராண சக்தியானது அதிகமாக காணப்படுவதால் அவர்கள் எளிதில் முன்னேற்றம் அடைகின்றனர்.

அஷ்ட கர்மாக்களின் கணக்கை அமாவாசை அல்லது பெளர்ணமி மறுநாளிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.

1. என்பது பிரதமை

2. என்பது துதியை

3. என்பது திரிதியை

4. என்பது சதுர்த்தி

5. என்பது பஞ்சமி

6. என்பது சஷ்டி

7. என்பது சப்தமி

8. என்பது அஷ்டமி

9. என்பது நவமி

10. என்பது தசமி

11. என்பது ஏகாதசி

12. என்பது துவாதசி

13. என்பது திரயோதசி

14. என்பது சதுர்த்தசி

15. என்பது அமாவாசை அல்லது பெளர்ணமி என்று அழைக்கப்படுகிறது.

இந்த சுற்றுப்பாதையிலேதான் சுற்றி வந்துகொண்டிருக்கும். இதை நீங்கள் நன்கு தெரிந்து கொண்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை எளிதில் கண்டு பிடித்துவிடலாம். அதற்காகதான் எந்தவொரு யோகம் செய்தாலும் குரு துணையோடு, உபதேசம் பெற்று செய்தால் எளிதில் முன்னேறிவிடலாம்.

 

இப்பொழுது அஷ்ட கார்மாக்களைப் பார்ப்போம்.

1. வசியம்

2. மோகனம்

3. உச்சாடனம்

4. ஸ்தம்பனம்

5. ஆகர்ஷனம்

6. வித்துவேடனம்

7. பேதனம்

8. மாரணம்

என்பனவாகும் என்பதை சென்ற பதிவிலேயே பார்த்தோம். இப்பொழுது அது என்னென்ன சக்திகளை உருவாக்குகின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

1. வசியம் : இது மற்றவர்களை தன் வசப்படுத்துதல் அதாவது தனது வசீகரத் தன்மையினால், தான் சொல்வதை அவர்கள் செய்யக்கூடிய தன்மைகளாக மாற்றுவது. ேமலும் வசியம் செய்தவரின் எண்ணங்களை மீறி அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போவது.

2. மோகனம் : இது பிறறை தன்மீது மோகம் கொள்ள செய்தல். அதாவது மயக்குவது, தன்னிடம் மயங்கச் செய்து தான் சொல்வதை மற்றவர்களைக் கேட்கச் செய்வது.

3. உச்சாடனம் : இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும். அதாவது மந்திர சக்தியால் தன்னுடைய நோய், கடன், பேய், பிசாசு, பூதம், எதிரிகள் போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்கவிடாமல் இருப்பதாகும்.

4. ஸ்தம்பனம் : இது எந்த ஒரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தப்பிக்கச் செய்வது. ஸ்தம்பனம் என்றால் தனது சக்தியால் ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்க செய்துவிடுவது. இதில் அன்பைக்கூட அப்படியே நிறுத்திவிடலாம். காற்றை, நீரை ஸ்தம்பித்து அதன் மீது அமரலாம், நடக்கலாம்.

5. ஆகர்ஷனம் : இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது. மனிதர்கள், மிருகங்கள், பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம். ஒரு சாதனுக்கு எதிரி பயன்படுத்த நினைக்கும் எந்தவிதமான பொருட்களையும் தன்னை நோக்கி வரச்செய்து தன்னை காத்துக் கொள்ளலாம்.

6. வித்துவேடனம் : இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கி பிரிப்பது. எது தனக்கு வேண்டாததோ அதை தன்னை விட்டு விலகி ஓடச் செய்வது. உதாரணத்திற்கு தன்னிடமுள்ள தீய எண்ணங்கள், தீண பழக்கங்கள் கூட ஓட செய்யலாம்.

7. பேதனம் : இது சுய நினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது. (அதாவது பைத்தியம் பிடிக்கச் செய்வது) இது தீராத பாவத்தை தரும். இதை நன்மைக்காக மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணத்திற்கு நம்முடைய அறியாமை, நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தலாம். அல்லது ஊரையே மிரட்டு கொள்ளையர்கள் போன்ற கூட்டத்தினரை பிரிக்கப் பயன்படுத்தலாம்.

8. மாரணம் : இது உயிர் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது. மனிதர்களின் தனக்குள்ளும், வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிக்க பயன்படுத்தலாம்.

எது செய்தாலும் பிற ஜீவன்களுக்கு துன்பத்தைக் கொடுக்கக்கூடிய செயல்கள் அனைத்தும் தீமையாகும். நமது உடலானது சுத்தம் செய்யப்பட்ட நிலமாகும். அதில் நாம் என்ன விதை விதைக்கிறோமோ அதைதான் அறுவடையாக எடுப்போம் என்பதை மறந்துவிடாதீர்கள். அடுத்த பதிவில் இந்த அஷ்ட கர்மாக்களின் மந்திரங்கள் அதற்கு பயன்படுத்தும் மாலைகள், ஆடைகள், மலர்கள், பலகைகள், திசைகள் மற்றும் கிழமைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் நன்றி வணக்கம்.

Tuesday, 1 June 2021

அஷ்ட கர்மாக்கள் என்றால் என்ன?

 


அஷ்ட
என்றால் எட்டு என்று பொருள். கர்மம் என்றால் செயல் என்று பொருள். அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டுவிதமான செயல்கள் என்று பொருள். இவைகள் முழுக்க மனித மனநிலை மேன்மை பெறவே உருவாக்கப்பட்டது. இந்த கர்மாக்களை நல்ல மனத்தோடு, உயர்ந்த நோக்கத்தோடு செய்வோருக்கு தங்களது தலைவிதியையே மாற்றக்கூடிய ஆற்றல் வந்துவிடும் என்று கூறுகிறார்கள் நமது சித்தர்கள்.

உடம்பே ஆலயம், உயிரே ஆண்டவன் என அறிந்துகொண்ட நமது சித்தர்கள். சாதாரண மனிதர்கள் வியக்கத்தக்கக்கூடிய சித்திகளை தங்களது முயற்சியால் அடைந்தார்கள். அதனால் அவர்கள் சித்தர்கள் ஆனார்கள். உடம்பின் சூட்சமங்களை அறிந்து கொண்டு, தவத்தாலும், சில மூலிகைகளைப் பயன்படுத்தியும், அட்டமா சித்திகளை அடைந்தார்கள். சித்தர்களும், சித்தர்களுக்குப்பின் வந்த சிலர் அரிய மூலிகைகளைக் கொண்டு சித்து வேலைகளை செய்தார்கள்.

அகத்தியர் மந்திரவாள் என்ற நூலில் எட்டுவிதமான மந்திரங்களும், எட்டுவிதமான செயல்களைச் செய்யக்கூடியவை என்று குறிப்பிட்டுள்ளது. சித்து வேலைகள் அனைத்தும் மந்திரங்கள் மற்றும் மூலிகைகளைக் கொண்டு செயல்படுத்தினர். ஒவ்வொரு சித்துக்கும் எட்டுவிதமான மூலிகைகைள பயன்படுத்தினர். எட்டு என்ற கணக்கில் ( 8 x 8 = 64 ) மொத்தம் 64 மூலிகைகளும், சில பாஷானங்களும் பயன்படுத்தப்பட்டன. அந்த காலத்தில் சித்தர்களின் ஆய்வில் பல மூலிகைகளைக் கொண்டு வசியம், ஸ்தம்பனம் போன்ற அற்புதங்களை செய்து வந்திருந்தனர். இவை " மூலிகை மாயாஜால திரட்டு" என்ற நூலில் விரிவாக உள்ளது.

 இந்த 64 மூலிகைகளில் பல இப்பொழுது கிடைப்பதில்லை. இந்த மூலிகையைப் பறிக்க வேண்டும் என்றால் சூரியன் தோன்றி முதல் நிழல் விழுவதற்கு முன்னர். இருள் இல்லாமல் இருக்கும் வேலையில் பறிக்க வேண்டும். சுமார் ஏழு மணிக்கு சூரியன் உதயம் என்றால் 6.50 லிருந்து 7.00 மணிக்குள் பறித்துவிட வேண்டும். அதாவது 10 நிமிடத்திற்குள் பறித்துவிட வேண்டும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

அஷ்ட கர்மாக்களை ஒருவர் தனக்காகவும் அல்லது பிறருக்காகவும் செய்வதால் கர்மா என்பது தொழில் எனப்படுகிறது. இந்த கர்மாக்களால் என்ன லாபம் என்றால் பணமோ அல்லது பொருளோ நமக்கு தராது. மன அமைதி, ஆழ்மன  நிம்மதி போன்ற நிலைகளை உங்களுக்கு கொடுக்கும். அது எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காத உன்னத நிலையாகும். வரும்போது ஒன்றும் கொண்டுவராத மனிதன், அவன் பூமிக்கு வந்த பிறகு தனது பிள்ளைகள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளு பேரக்குழந்தைகள் வரைக்கும் காசு, பணம், சொத்து என சேர்த்து பெரிய குடும்பமாக வாழ்ந்தாலும்நிம்மதியை தொலைத்தவனாக மாறிவிடுகிறான். தனி ஆளாக, தனி மரமாக நிற்பது போன்ற மன நிலைக்கு அவன் தள்ளப்படுகிறான். இது என்ன அவலமான நிலை? வாழ்வு என்பது ஆனந்தமானது, சோகமானது அல்ல. ஏன் இப்படி ஆனோம்! ஒரு மனிதன் தனது வாழ்வின் உண்மையான அதி சூட்சுமத்தினை உணர்ந்தால், மனமானது வேண்டாத கவலையை தன்னுள் வைத்திருக்காது. இது போன்ற கவலையிலிருந்து மீள்வதற்காகத்தான் நமது சித்தர்கள் இதுபோன்ற அஷ்ட கர்மாக்கள் என்ற எட்டுவித மந்திரங்களை உருவாக்கினார்கள்.

சரி எட்டுவித அஷ்ட கர்மங்களின் பெயர்களைப் பார்ப்போம்.

1. வசியம்

2. மோகனம்

3. உச்சாடனம்

4. ஸ்தம்பனம்

5. ஆகர்ஷனம்

6. வித்துவேடனம்

7. பேதனம்

8. மாரணம்

இந்த எட்டு விதமான கர்மாக்களின் சக்தி என்ன என்பதையும், அதன் செயல்பாடுகள் என்ன என்பதையும் அடுத்த பதியில் பார்ப்போம்.