Thursday, 31 October 2024

அஷ்ட கர்மாக்களின் மந்திரங்களும் அதன் செயல்பாடுகளும்

 

மந்திர உச்சாடணம் செய்வதற்கு முன் முதல் கடவுளான கணபதியை முறைப்படி பூஜை, பரிகாரங்கள் செய்துவிட்டு, எனக்கு மந்திர உச்சாடணம் நல்ல வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு வழிபாட்டினைத் தொடங்க வேண்டும்.

முதலில் மந்திரத்திற்கு உரிய ஆடை அணிந்து, அதற்குறிய பலகை, பூ, மற்றும் நீங்கள் அணியக்கூடிய மாலைகளை வைத்து ஆராதனை செய்த பின்னர், மந்திரங்களை உருக்கொடுக்க வேண்டும். அதற்குரிய எண்ணிக்கையில் உருக்கொடுத்தப் பின்னர், கற்பூர ஆரத்தி காட்டி பூஜையினை நிறைவு செய்ய வேண்டும்.

உருக்கொடுக்கும்போது எண்ணிக்கை மனதில் பதிய கை விரல்கள் அல்லது ஜெப மாலைகளை 108 எண்ணிக்கை உடையதை பயன்படுத்தலாம். மந்திரம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் சாதனமாகும். பத்மாசனம் அல்லது சுகாசனம் போன்ற ஆசனத்தில் அமர்ந்து மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில் உடல், மனம், ஆத்மா மூன்றையும் நிலை நிறுத்தி மந்திரத்தை உச்சாடனம் செய்ய வேண்டும். முக்கியமாக தரையில் அமர்ந்து மந்திர உச்சாடனம் செய்யக்கூடாது. அதற்குறிய பலகையின் மேல் அமர்ந்துதான் உச்சாடனம் செய்ய வேண்டும். அதாவது உதடு, நாக்கு அசையாமல் மந்திரத்தினை மனதிற்குள்ளே உச்சரிக்க வேண்டும். மந்திரத்தின் தன்மைக்கேற்ப திசையினை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

 

1. வசியம் :

மந்திரம் : ஓம் ரீங் வசி வசி

மலர் : மல்லிகை

பலகை : வில்வம்

ஆடை : செம்பட்டு

திசை : வடகிழக்கு

மாலை : ருத்ராட்சம்

கிழமை : ஞாயிறு


2. மோகனம் :

மந்திரம் : ஓம் ரீங் மோகய! மோகய!

மலர் : முல்லை

பலகை : மாம்பலகை

ஆடை : மஞ்சள் பட்டு

திசை : தென் கிழக்கு

மாலை : மிளகுமணி

கிழமை : செவ்வாய்

 

3. உச்சாடனம் :

மந்திரம் : ஓம் ரீங் உச்சாடய! உச்சாடய!

மலர் : தும்பை

பலகை : வெப்பாலை

ஆடை : பஞ்சவர்ண பட்டு

திசை : தென்மேற்கு

மாலை : துளசி மணி

கிழமை : வியாழன்

  

4. ஸ்தம்பனம் :

மந்திரம் : ஓம் ரீங் ஸ்தம்பய! ஸ்தம்பய!

மலர் : தாமரை

பலகை : பலா பலகை

ஆடை : பச்சை பட்டு

திசை : கிழக்கு

மாலை : தாமரை மணி

கிழமை : வெள்ளி

 

5. ஆகர்ஷனம் :

மந்திரம் : ஓம் ரீங் ஆகர்ஸ்ய! ஆகர்ஸ்ய!

மலர் : அரளி

பலகை : வெண் நாவல்

ஆடை : ஆந்தை வண்ணப்பட்டு

திசை : மேற்கு

மாலை : சங்கு மணி

கிழமை : வெள்ளி


6. வித்துவேடனம் :


7. பேதனம் :


8. மாரணம் :


இந்த மூன்று கர்மாக்களும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை என்பதால் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாம். இந்த மந்திரங்கள் எல்லாம் எதற்காக என்றால் மனம் ஒடுங்குவதற்காகதான், மனம் ஒடுங்கினால் மூச்சு ஒடுங்கும், மூச்சி ஒடுங்கினால் மனம் ஒடுங்கும். இரண்டு ஒன்றையொன்று தொடர்பு உடையவை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மனம் ஒடுங்கினால் நாம் நினைப்பதை எல்லாம் இந்த பிரபஞ்சம் செயல்படுத்தும். மனம் ஒடுங்காத வரைக்கும் எந்தவொரு மந்திரம், எந்திரம், தந்திரமும் வேலை செய்யாது. மனமானது எங்கும் அலையாமல் இருக்க அதன் போக்கிலேயே சென்று அதை ஒடுக்கம் செய்ய வேண்டும். மனதை அடக்காதீர்கள் அடக்கினால் அதிவேகமாக செயல்பட்டு நமக்கு பல தீமைகளை உருவாக்கக்கூடும். சில பயிற்சியினாலே அதுவாகவே ஒடுக்கமாக வேண்டும். 

இந்த மந்திரம் எல்லாம் எதற்காக என்று நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது. இதெல்லாம் ஆன்மீகப் பாதையின் அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மட்டுமே என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இதை புரிந்துகொண்டு அடுத்த நிலைக்கு செல்லுங்கள் உங்கள் வாழ்க்கையில் ஆனந்தமும், மன நிறைவும் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். நன்றி!

 

 

0 comments:

Post a Comment