Thursday, 27 May 2021

ஆத்ம ஞானம் என்றால் என்ன?


7 வகை பிறப்பு. 4 வகைத்தோற்றம், 84 லட்சம் ஜீவராசிகள் அனைத்துமே ஆத்மாக்களின் கூட்டம்தான். இவற்றில் மனிதனுக்கு மட்டுமே சிறப்பு அறிவு உண்டு. அதைதான் ஆறாவது அறிவு என்று கூறுகிறோம். மனிதனால் மட்டுமே தான் யார்? என்ற அறிவும், சிறப்பான ஆற்றலும் இருப்பதால், மனிதனாகி, புனிதனாகி, பின் கடவுள் என்கின்ற பேராற்றலைப் பெறமுடிகிறது. மனிதன் தன் ஆத்மாவை உணர்கின்ற பரிசுத்தமான பேரறிவே ஞானம். ஆத்மாவானது தீய பதிவுகளை நீக்கி, பரம்பொருளை உணர்ந்து மீண்டும் பிறக்காமல் இருக்க இந்த உடலைத் தானாகவே கட்டிக்கொண்டது. அதைக் காத்தும் வருகின்றது. ஐந்து புலன்களால் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் மாயை என்கிற விலங்கின் வாயில் அகப்பட்டு அறிவு, தெளிவு அற்ற நிலையிலும், தன்னுடைய பற்றினால் தெளிந்து அறிவு பெற்று செயலாற்றுகின்றது. 

 இந்த உலகில் வாழும் அனைத்து ஜீவன்களும் ஒன்றை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. ஆனால் அது எங்கே இருக்கிறது என்று தெரியாமல் அங்கும், இங்குமாய் அலைந்துகொண்டு இருக்கின்றன. அதுதான் ஆனந்தமான வாழ்க்கை. பொன், பொருள் போன்றவற்றை சேர்ப்பதும், அவை நிலையாக இருக்க வைப்பதற்காக இது தேவைப்படுகிறது. பொன், பொருள், பணம், சொத்து மற்றும் மக்கள் இவைகள் எல்லாம் அல்ல. பேறறிவு ஒன்று மட்டுமே இங்கு தேவைப்படுகிறது. இந்த அறிவைக் கொண்டுதான் அனைத்தையும் செயல்படுத்துகிறான். இந்த அறிவு அதிலும் தெளிந்த அறிவே போதும். இந்த உலகத்தில் ஆனந்தமான வாழ்க்கையை வாழ வழி வகுக்கும். இந்த ஆனந்தமான வாழ்க்கை எங்கு இருக்கிறது. இந்த உலகில் வேறு எங்கும் கிடையாது. அது தன்னிடமே உள்ளது என்ற தெளிந்த அறிவு மட்டுமே இருந்தால் போதும் உண்மையான ஆனந்தத்தை அடைந்துவிடலாம்.

இதை எப்படி தெரிந்து கொள்வது? நான் யார்? என்பதை உன்னை முழுவதுமாக அரிந்து கொண்டால், பேரின்பத்தை வெகு விரைவில் அறிந்து கொள்ளலாம். தன்னைப்பற்றி தெரிந்து கொள்வது எப்படி என்றால் நான் யார்? ஆத்மா என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? ஆத்ம ஞானம் என்றால் என்ன? தெளிந்த மனம் எப்படி இயங்குகிறது? இறைவன் என்பவன் யார்? பஞ்ச பூதம் என்றால் என்ன? அதன் தத்துவங்கள் நமக்குள் எப்படி இயங்குகிறது. இந்த உயிரிலிருந்து உடல் எப்படி உருவாக்கப்பட்டது? உலகம் என்றால் என்ன? உலகம் எப்படி தோன்றின? அது எப்படி இயங்குகிறது. நம் உடலின் உறுப்புகள் பற்றிய அறிவு, உடலின் இயக்கங்கள், உடல் நலன் பற்றிய அறிவு, ஐம்புலன்களின் வழியே மனம் எப்படி வெளியே சென்று செலவாகிறது? அது எப்பொழுது தானாக அடங்கும்? மனம் அடங்கினால் என்ன நடக்கும் போன்றவற்றை அறிவதே ஆத்ம ஞானம் எனப்படும்.

0 comments:

Post a Comment