ஒரு மனிதனின் உடல் அமைப்பை ஆதாரமாகக் கொண்டுதான் கோயில்கள் கட்டப்பட்டு வழிபாட்டுக்குறிய அமைப்பாக மதிக்கப்படுகிறது. ஆலயத்தை ஆ + லயம் எனப் பிரித்தால் "ஆ" என்றால் உயிர் என்றும், லயம் என்றால் லயிக்கின்ற என்றும் பொருள். உயிர்கள் லயிக்கின்ற இடம் "ஆலயம்" எனப்படும். மனிதனின் இரண்டு பாதங்களும், கோயில் ராஜகோபுரங்கள், மனிதனின் பீஜங்கள் (ஆண் உறுப்பு) கொடி மரத்தின் அடிபாகமாகும். தொண்டை குழி நந்தியின் இருப்பிடமாக கருதப்படுகிறது. சிரசு என்பது கருவறையாக பார்க்கப்படுகிறது. இப்படியாக ஆலயத்திற்கும், மனித உடலுக்கும் தொடர்பு இருப்பதாக நமது மகான்கள் கூறியிருக்கிறார்கள். அடுத்தது ஆலய வழிபாடு நம்மை மேல்நிலைக்கு எப்படி கொண்டு செல்கிறது என்பதை பார்ப்போம்.
நாம் இறைவனை வணங்குவதற்காகதான் இந்த மனித பிறவியே எடுத்திருக்கிறோம். அவன் அருளாளே அவன் தாள் வணங்கி. இதற்கு ஒரு கதை உண்டு. ஒரு பக்தர் இறைவனிடம் இரண்டு முறை மன்னிப்பு கேட்டாராம். நான் வணங்கி கேட்கிறேன் என்னை மன்னித்துவிடு இறைவா, நான் வணங்கி கேட்கிறேன் என்னை மன்னித்துவிடு இறைவா என்று அதற்கு அவர் அருகில் உள்ளவர்கள் கேட்டார்கள், என்ன ஐயா இரண்டு முறை மன்னித்துவிடு, மன்னித்துவிடு என்று சொன்னீர்களே அது எதற்காக, அதற்கு அந்த பக்தர் கூறினார். முதல் மன்னிப்பு எதற்காக என்றால் சென்ற பிறவியில் நான் இறைவனை வணங்கவில்லை. இறைவனை வணங்காததால் எனக்கு இந்த பிறவி கிடைத்திருக்கிறது. அதனால் சென்ற பிறவிலேயே இறைவனை வணங்காததால் இந்த பிறவியில் வணங்கியதற்காக என்னை மன்னித்துவிடு என்று வணங்கினேன். அது சரி இப்பொழுதுதான் நீ இறைவனை வணங்கிகொண்டு இருக்கிறாயே அப்படி இருக்க இரண்டாவது மன்னிப்பு எதற்கு? அதற்கு அவர் பக்தர் சொன்னார். ஒருவன் இறைவனை வணங்கினால் அவனுக்கு மறுபிறவி கிடையாது என்பது சித்தாந்தம். அப்படி இருக்கையிலே நான் இறைவனை வணங்கிய பிறகு எனக்கு மறுபிறவி என்பது இல்லாமல் போய்விடும். அப்படி மறுபிறவி பிறக்காமல் இருந்தால் நான் எப்படி இறைவனை எப்படி வணங்குவது, அதற்காகதான் நான் இனிமேல் வணங்காமல் போய்விடுமோ என்பதற்காக இரண்டாவது மன்னிப்பு என்று கூறினார். நமது நோக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால், இறைவனை நன்றியோடு நினைத்து வணங்க வேண்டும். அப்படி வணங்கினால் நமது கர்மங்கள் எல்லாம் தொலைந்து மறுபிறவி இல்லா நிலை கிடைக்கும். அடுத்த பிறவி இல்லாமல் போவதற்கும் சேர்த்து இப்பொழுதே வணங்கிக்கொள்ள வேண்டும். அப்படி வணங்கினால் நமக்கு நல்ல பலனைக்கொடுக்கும்.
ஆன்மீகத்தின் முதல் படி ஆலய வழிபாட்டிலேயே தொடங்குகிறது. யாரும் உடனே ஞான நிலையை சென்றுவிடுவதுமில்லை. அதனால் ஆலய வழிபாடே அவர்களின் முதலாவதான ஆன்மீக பாதையின் படிகல்லாக இருக்கிறது. ஆலயங்களில் எப்படி வழிபட வேண்டும் என்பதை இப்பொழுது பார்க்கலாம். மனித உடலுக்கும், ஆலயத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நமது சித்தர்கள், யோகிகள், ரிஷிகள் போன்ற மகான்கள் கூறி இருக்கிறார்கள். மனித உடலை ஒரு ஆலயத்திற்கு ஒப்பாக பார்க்கும்பொழுது அதாவது மல்லாந்து படுத்துக்கொண்டு இருக்கும் நிலையிலேயே நாம் பார்ப்போம். இது எப்படி மேல்நிலைக்கு கொண்டு செல்கின்றது என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.
மனிதனின் இரண்டு பாதங்களும் ராஜ கோபுரம் என்பதை பார்த்தோம். அந்த ராஜகோபுரத்தின் வழியாக நாம் உள்ளே நுழைந்ததும். கொடி மரத்தின் அருகில் சென்று ஒரு வணக்கத்தைப் போட வேண்டும். பிறகு இடமிருந்து வலமாக ஆலயத்தை சுற்றி வரவேண்டும். வலம் வரும்பொழுது எந்தவிதமான மந்திரங்களோ, முனுமுனுப்புகளோ செய்யக்கூடாது. உங்கள் மனமானது ஆலயத்தை மட்டுமே சுற்றுகிறோம் என்ற என்னம் மட்டுமே இருக்க வேண்டும். ஒருமுறை முழுமையாக வலம் வந்த பிறகு கொடிமரத்தின் அடியில் வந்து மீண்டும் ஒரு வணக்கத்தை செலுத்த வேண்டும். அடுத்தது நந்தியின் இடத்திற்கு சென்று அங்கு ஒரு வணக்கத்தை செலுத்திவிட்டு, கர்பகிரக அறைக்கு செல்முன் இருபுறமும் துவார பாலகர்கள் என்று சொல்லக்கூடிய இரு விக்கிரகங்கள் இருக்கும். அவர்களிடம் நாம் கருவரைக்குச் செல்வதற்கு அனுமதி கேட்க வேண்டும். அவர்களிடம் அனுமதி பெற்ற பிறகு கருவரைக்குள் இருக்கும் இறைவனை வணங்கும் வழிபாட்டை தொடங்க வேண்டும். கருவறையானது இருட்டிலேயே வைக்கப்பட்டிருக்கும் அதிகபடியாக ஒரு விளக்கு மட்டுமே எரிந்த கொண்டிருக்கும். இருட்டில் இருக்கும் இறைவன் நமக்கு தெளிவாக தெரிவதற்கு அர்ச்சர்கள், கற்பூரம் ஏற்றி அந்த வெளிச்சத்தில் இறைவனின் முகம் தெரியும்படி தெளிவாகக் காட்டுவார்கள். அப்பொழுது இருட்டில் இருக்கும் இறைவன் வெளிச்சம் பட்டவுடன் தெளிவாகத் தெரிவார்.
அப்பொழுது எந்தவித சேஷ்டைகளும் நாம் செய்யக்கூடாது. அந்த இறைவனை நம் மனதிற்குள் முழுவதுமாக வாங்கிக்கொள்ள வேண்டும். வழிபாடு முடிந்ததும் வெளியே வந்துவிட்டு, கொடி மரத்தின் அடியில் சென்று சற்று நேரம் அமர வேண்டும். நாம் பொதுவாக கோவிலுக்கு வந்தால் சற்று அமர்ந்துவிட்டு அதன் பிறகு செல்வது வழக்கம். அப்படி அமர்ந்த நாம் என்ன செய்கிறோம், ஒரு சில கதைகளை பேசவும் அல்லது பிரசாதம் வாங்கி சாப்பிடவுமாய் இருக்கிறோம். அப்படி செய்யக்கூடாது. அந்த இடத்தில் அமர்ந்து கண்களை மூடி ஒரு வினாடி அந்த ஆலயத்தின் இறைவனை மனதார பிராத்திக்க வேண்டும். பிறகு கண்களை திறந்து ஆலயத்தில் என்னவெல்லாம் செய்தீர்களோ அதாவது முதலாவதாக ராஜ கோபுரத்தின் வழியே நுழைந்தோம், கொடி மரத்தினை வணங்கினோம், வலம்புறமாக சுற்றி வந்தோம், பிறகு மீண்டும் கொடி மரத்தினை வணங்கினோம், துவார பாலகரிடம் அனுமதி பெற்றோம், உள்ளே ஆரத்தி காட்டப்பட்டது, அதில் இறைவனை தெளிவாக காண்கிறோம், அதை நாம் உள் வாங்கிக்கொண்டோம். இப்பொழுது அந்த இறைவனின் முகம் உங்கள் மனக்கண் முன்னே வந்து நிற்கும்.
இப்பொழுது உங்கள் பிராத்தனையை அங்கு வையுங்கள். இறைவா இப்பொழுது ஏற்படும் விதமான துன்பங்களும் விலகி நான் நலம்பெற வேண்டும், ஆரோக்கியம் பெற வேண்டும். பொருளாதாரம் மேன்மைபெற வேண்டும், என் குழந்தைகள் நல்ல கல்வி செல்வத்தைப்பெற வேண்டும், மனதால், புத்தியால், சிந்தனையால் நான் நல்லவனாக இருக்க வேண்டும், நல்லவர்களுடைய நட்பு எனக்கு நிறைய கிடைக்க வேண்டும், நான் எல்லோருக்கும் நல்லவனாய் இருக்க வேண்டும் போன்ற உத்தமமான கோரிக்கைகளை வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். பிறகு உங்கள் வீட்டிற்கு சென்றுவிடலாம். இதுபோன்று ஆலய வழிபாடு செய்யும்பொழுது ஒரு சூட்சமம் அடங்கி இருக்கிறது. அது என்னவெனில் இந்த நிலையை நீங்கள் வீட்டில் இருக்கும்பொழுது குளித்துவிட்டு, உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையிலே சென்று உட்கார்ந்து கொண்டு, ஆலயத்தில் நீங்கள் என்னவெல்லாம் செய்து தரிசித்தீர்களோ, அவையெல்லாம் உங்கள் மனக்கண்ணால் தரிசிக்க வேண்டும். அதாவது கோபுர வாசல் வழியே உள்ளே நுழைந்தீர்கள், கொடி மரத்தினை வணங்கினீர்கள், கோயிலில் வலம் வந்தீர்கள், நந்தி தேவரை வணங்கினீர்கள், துவார பாலகரிடம் அனுமதி பெற்றீர்கள், இறைவனை தரிசித்தீர்கள், இவையெல்லாம் உங்கள் மனக்கண் முன்னே செய்து பார்க்கிறீர்கள், இப்பொழுது உங்கள் குறைகளை இறைவனிடம் பிரார்த்தனை வைத்திடுங்கள். இது ஒரு அருமையான தியானமாக மாறிவிடுகிறது. இந்த கால கட்டத்திலேயே உங்களை மறந்து மனதார நீங்கள் அந்த உன்னதமான நிலையை அடைவீர்கள்.
இது ஆன்மீகத்தின் முதல்படியாக அமைகிறது. சரி முல் வழிபாட்டிலேயே தியானம் போன்ற ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம். அடுத்த நிலையிலேயே இவர்களுக்கு தேவையான கருத்துக்களை, அந்த காலத்தில் உபநிசங்கள், இறைவனைப் பற்றிய பாடல்கள் அதற்கான விளக்கங்கள் அல்லது இறைவனைப் பற்றிய கதைகள் இதுபோன்றவை ஆலயங்களிலேயே நிகழ்த்தினார்கள். அதற்கான வினாக்களையும் தந்து, அடுத்த நிலைக்கு உங்களை நகர்த்தி செல்வார்கள். இதைக் கேட்ட பிறகு, உங்கள் அடுத்த நிலைக்கு உந்துதல் தரும் மகான்கள் மற்றும் ஞானிகளிடம் சென்று அவர்களிடம் உபதேசங்கள் பெறுவதற்கு செல்வீர்கள். அவர்கள் உங்களுக்கு அடுத்த கட்டத்தைக் காட்டி தருவார்கள். இப்பொழுது நீங்கள் ஞான பாதையிலே நகர ஆரம்பித்துவிட்டீர்கள். இப்பொழுது உங்கள் மகான்கள் எந்த நூல்களை எல்லாம் வாசித்தால் தெளிவு ஏற்படும் என்று காட்டிக்கொடுப்பார்கள். அல்லது ஏதாவது ஒரு மந்திர உபதேசங்கள் கொடுப்பார்கள். இந்த மந்திர உபதேசங்கள் பெற்ற பிறகு கொஞ்சம், கொஞ்சமாக உங்கள் மனமானது லயமாக ஆரம்பிக்கும். அதன் பிறகு உங்கள் மனம் அடடா இதைவிட மேன்மையான ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்க ஆரம்பிக்கும். அப்பொழுது நீங்கள் உத்தம குருவை சந்திப்பீர்கள். அந்த உத்தம குரு உங்களுக்கு சரியான ஞான பாதையைக் காட்டுவார். இப்படித்தான் படிப்படியாக ஒரு மனிதன் ஆன்மீக பாதையின் உச்சத்தைத் தாெடுவதற்கு ஆலய வழிபாடு ஆரம்பமாக இருக்கிறது.
0 comments:
Post a Comment