Thursday, 4 January 2018

What is Anemia - இரத்த சோகை என்றால் என்ன?


இரத்தத்தில் ஹீமோகுளோபின் Hemoglobin குறைவதால் இரத்த சோகை (Anemia) ஏற்படும். இரும்பு, புரதம், வைட்டமின் B12, வைட்டமின் C, ஃபோலேட் folate ஆகிய சத்துக்கள் உணவில் குறைவதால் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படுகிறது. எனவே மேற்கூறிய சத்துக்கள் நிறைந்த உணவை  சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை குணமாகும். இந்த உணவு வகைகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.

  • தினமும் ஏதாவது ஒரு கீரையை உண்ண வேண்டும்.
  • தினமும் காலையில் 6 பேரிச்சம்பழம், ஒரு வாழைப்பழம் உட்கொள்ள வேண்டும். (காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் உண்டால் மிகவும் நல்லது)
  • எலுமிச்சை ஜூஸ் உடன் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் குடிக்கவும்.
  • தினமும் மதிய உணவில் 10 சுண்டக்காய் வற்றல் அவசியம் சேர்க்கவும்.
  • தினமும் இரண்டு காய்கறிகள், ஏதாவது ஒரு பழம் பச்சையாக அவசியம் சாப்பிட வேண்டும்.

0 comments:

Post a Comment