Friday, 6 July 2018

மனித உடலிலுள்ள 96 தத்துவங்கள்


மனித உடல் இயக்கமானது 96 தத்துவங்களைக் கொண்டதாகும். முதல் உடல் பாகமாகிய 25 தத்துவங்கள் பருவுடலாகும் (ஸ்தூல). இரண்டாவது நடு உடல் பாகமாகிய 35 தத்துவங்கள் நுண் உடலாகும் (சூக்கும) இறுதி உடல் பாகமாகிய 36 தத்துவங்கள் காரண உலாகும். இந்த 96 தத்துவங்களும் மனித உடலை இயக்கும் ஒரு கருவிகளாகும், இவற்றின் வகைகளை நன்கு அறிந்தவரே சிறந்த ஆசான் என்பார்கள்.

"சொல்லுவோம் பூதாதி ஓரைந் தாகும்
       சூட்சமாய் பொறிஐந்து புல னைந்து
வெல்லுவோம் கன்மவிந் திரிய மைந்து
       விதமான ஞானவிந் திரிய மைந்து
நல்லுவோம் ணமது நான்கே யாகும்
       நலமான அறிவொன்று நாடி பத்து
அல்லவே தசவாயு பத்து மாகும்
       ஆனதொரு ஆசயமஞ்சு கோச மஞ்சே"

"அஞ்சான ஆதார மாறு மாகும்
       அப்பனே மண்டல மூன்று முலமூன்றாகும்
துஞ்சாத தோடமூன் றீடணை மூன்றி
       தொடர்ந்த குணமூன்றா கும்
தஞ்சமுள்ள வினைரெண்டு ராகமெட்டு
       சார்ந்த தொரு அவஸ்தை அஞ்சு
கொஞ்சாத கருவிதொண் ணூற்றாலும்
       குறிப்பாக ஒவ்வொன்றாய் விவரிப் போமே"
                                                                                       (வர்ம கண்ணாடி - 500)

"ஆச்சுதே தொடுகருவி தொண்ணூற் றாறும்
       அசைந்தாடும் தொடுவர்மம் ஆச்சுதப்பா
வீச்சுதே படுவர்மம் பன்னிரண் டுந்தான்
       விதமான கருவியில் காணார் காணார்
வாச்சுதே இவைகடடி நூற்றெட் டாச்சு
வகையறிந் தோன்றிவா னவனே ஆசான்
                                                                                       (வர்ம பஞ்சீகரணப்பின்னல் - 1500)

0 comments:

Post a Comment