Thursday, 5 July 2018

வர்ம மருத்துவத்தின் அளவுமுறைகள்


மனித உடலிலுள்ள வர்ம புள்ளிகளை விரல்களைக் கொண்டுதான் அளந்தார்கள். அதன் அளவு முறைகளை கீழே கொடுத்துள்ளேன். இந்த முறையைப் பயன்படுத்திதான் மனிதனில் உடலின் அளவு முறைகளைக் கணித்தனர்.

2 நெல்லளவு = 1 விரலளவு
12 விரலளவு = 1 சாண்
2 சாண் = 1 முழம்
4 முழம் = 1 மனிதனின் உயரம் (96 விரலளவு )
இறை என்பது பெரு விரலளவு
ஒட்டை என்பது 10 விரலளவு.

1 விரலளவு என்பது ஆள்காட்டி விரலளவு, 4 விரலளவு என்பது ஆள்காட்டி விரல் முதல் சுண்டு விரல் முடிய நான்கு விரல்களையும் சேர்த்து. இறை என்பது கட்டை விரலளவு ஆகும். 1 சாண் என்பது கட்டை விரல் விரிவுப்படுத்தி சுண்டு விரல் நுனிப்பகுதி வரை அளக்கும் அளவே 1 சாண் எனப்படும். சராசரி ஒரு மனிதனின் உயரம் 96 விரல் அளவு.

0 comments:

Post a Comment