Thursday, 12 April 2018

சித்தர்களின் முக்குற்றக்கொள்கை




சித்தர்களால் கண்டறியப்பட்ட - மனித உடலிலுள்ள வாதம் (காற்று), பித்தம் (வெப்பம்), கபம் (குளிச்சி) இவற்றின் தொழில்களைக் குறிப்பதாகும், இது, தொழிலையும், அதன் தன்மையையும் குறிக்கும். இதனால், சிகிச்சை முறைகளையும் அறியலாம். 64 - உடற்தத்துவங்களாகிய, இக்கருவி கரணாதிகள் அந்தக் காரணங்களையும், ஆன்ம போதத்தையும் அல்லது இரண்டையும் குறிக்கும். அதாவது ஒரு கட்டிடத்திற்கு தூணைப்போலுள்ள இம்மூன்று தத்துவங்களின் தொழில்கள் மாறுபடுவதையே தோடங்கள் அல்லது குற்றங்கள் எனப்படும். இவையே மனித உடலுக்கு ஆதாரமாயுள்ளது, மனிதனின் சூக்கும சக்திகள் வீணாத்தண்டின் கயிற்றினுள்ளும், மூளையிலும் உள்ளன. இப்பிராண சக்தியாகிய வாதத்தோடு, பித்தம் கபம் கூடினால் முப்பிணி எனப்படும். எனவே, இம் முக்குற்ற நிலையினையே நோய் ஏற்படும்போதும்-மற்ற சமயமும் கவனிக்க வேண்டும். இவை, தனதளவினின்று கூடினும்-குறையினும் தொல்லைகள் ஏற்பட்டு, குருதியும், இதர தாதுக்களும் கேடுற்று பிணியாக மாறும். இவற்றை ரவி-மதி-நெருப்புக்குத் தொடர்புபடுத்தி,  சூரிய-சந்திர-ஆதித்த மண்டலம் என அழைக்கப்படும். இவற்றின் செயல்களாக படைத்தல் (செயல்) - காத்தல் (கவரல்) - அழித்தல் (இசைவு) இவற்றைக் கூறப்படும். இவற்றின் பொருளும்-செயலும் சாதாரணமானவர்களுக்குப் புரியாது. அதற்கு, மனிதனைப் பற்றிய கல்வியும், அறிவும்-அவனது ஆன்மா, உயிர் வசீகரம், தெய்வீகம், செயல்பாட்டின் தன்மை போன்றவற்றையும் தெரிய வேண்டும்.

0 comments:

Post a Comment