இந்த காலத்து பிள்ளைகள் எல்.கே.ஜி படிக்கிற குழந்தைகள் எடுத்துச் செல்லும் புத்தகத்தைப்பார்த்தால் 12-ஆம் வகுப்பு படிக்கிற மாணவர்களுடைய அளவுக்கு பெரியதாக இருக்கிறது. இந்த சிறிய வயதிலேயே குழந்தையின் மூளையில் அதிகமாக பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் குழந்தைகள் மன அழுத்ததிற்கு ஆளாகிவிடுகின்றனர். அதனால் அவர்கள் மன அழுத்தத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க நல்ல ஆரோக்கியமான உணவுகைளப் பற்றி பார்ப்போம்.
- தினந்தோறும் மதிய உணவில் தயிர் கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளவும்.
- மீன் வைட்டமின் டி உள்ளதால் சிறியவகை மீன்களை குழந்தைகளுக்கு வாரம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும். பகலில் மட்டுமே கொடுக்க வேண்டும். இரவில் கொடுக்கக்கூடாது.
- நாட்டுக்கோழி முட்டையை நன்கு வேகவைத்து தினமும் காலையில் கொடுக்க வேண்டும்.
- பாலில் புரோட்டின், வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக உள்ளதால் தினமும் இரண்டு வேலை பால் கொடுக்கலாம். தயவுசெய்து பாக்கெட் பால் கொடுக்காதீர்கள்.
- அதிகமாக பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, சுண்டல், கடலைப்பருப்பு, சிவப்பு காராமணி, தட்டைப்பயறு மற்றும் உளுத்தம் பருப்பு.

0 comments:
Post a Comment