சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் என பொதுவாகக் கூறுவார்கள். அவர்கள் அனேக காலத்திற்கு முன்பு இருந்தே வந்துள்ளதால் இதுதான் அவர்கள் வாழ்ந்த காலம் என்று கூற முடியவில்லை. நவதாதச் சித்தர்கள் தொன்று தொட்டு இருந்துள்ளதாகவும்-இவர்களுக்குப் பின் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே பதினெண் சித்தர்கள் தோன்றினர் எனவும் அறிகின்றோம். அயோத்தி மன்னர் இராமபிரான் வனவாசத்தின்போது, தண்டகாரணியத்தில் சித்தர்களிடமிருந்து பெளதிக-வாத முறைகளைக் கற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வான்மீகர் மூலமாக புற்றான் சோற்றின் மகிமையை அறிந்து, கடலை வற்றச் செய்து இலங்கைக்குச் சென்றதாக யாகோபு கூறுவார். மேலும், துங்கபத்திரா நதிக்கு வடபுறம், விந்திய மலையைச் சார்ந்த காடுகளில் அகஸ்தியர் வசித்து வந்த பின்னரே-சுமார் கி.மு.750-ல் ஆரியர் தென்னக எல்லையினுள் நுழையத் தொடங்கினர் எனவும்-அவர்கள் அகஸ்தியர் தலைமையின் கீழ்தான் தமிழகத்தை அடைந்ததாகவும் கருதப்படுகிறது. தன்வந்திரியின் மாணவரெனக் கூறப்படும் இந்த அகஸ்தியர் 18-24-48 சீடர்களுடன் ஆசிரமம் அமைத்து கல்வி புகட்டியதோடு, ஆயுள் வேதத்தையும் இங்கு நுழைத்தார் எனவும் கருதப்படும். இதன் மூலம், ஆரிய மார்க்கங்களை இங்கு புகட்டியதால் தான் - சித்தர்களது அரிய பெரிய செயல்களும், சித்தர்மார்க்கமும் கொள்கைகளும் சீரழிந்து வேரற்றப்போனது.
சகல கலைகளிலும்-ஆய்வுகளிலும்-மருத்துவத்திலும் மிகவும் அறிவுப் பூர்வமான சித்தர்களது காலம்-பொற்காலமாகும். அப்போது, புதிய சிந்தனைகள். தோன்றிச் செழித்தோங்கின. ஆயுள்வேதம் நுழைந்தபின் நிலையான கருத்துக்கள் மாறி புதியனவற்றில் மோகம் பிறந்தது. எனினும், பழைய முறைகளும் தொடர்ந்தன. 17-ஆம் நூற்றாண்டின், சர் தாமஸ் புரோனி என்பவர் சித்த மருத்துவ நுணுக்கங்களை ஒளிவீசும் வின்மீண்களெனக் கூறுவார். சித்தர்களது முக்குற்றக் கொள்கையும் மூளையிலுள்ள (பினியல்) சுரப்பியில் ஆன்மா தங்கியுள்ளதாகக் கூறுவதும் இன்றும் நிலைத்துள்ளது. ஒரு அறிஞரின் முடிவின்படி சித்த மருத்துவமுறை, கி.மு. 10000-4440 ஆண்டுகளிலேயே இருந்துள்ளதாகக் கூறுவர்.
Reference book : Siddha Maruthuva Gurugulam
Reference book : Siddha Maruthuva Gurugulam

0 comments:
Post a Comment