சிறுவர் முதல் பெரியவர் வரை எளிதில் தாக்கக்கூடிய ஒரு நோயாக சளி மற்றும் தொண்டைவலி உள்ளது. இதனை குணப்படுத்த இயற்கையான முறையில் எளிமையான சுக்கு - மல்லி காப்பி தயாரிப்பது எப்படி?
சுக்கு - 5 கிராம், மிளகு - 10 கிராம், திப்பிலி - 10 கிராம், சித்தரத்தை - 10 கிராம், தனியா - 100 கிராம் இவைகளை வாணலில் வறுத்து, ஆற வைத்து அரைத்துக்கொள்ளவும். இந்த தூளை ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரண்டு ஸ்பூன் பொடியைக் கலந்து, தேவையான அளவு பனை வெல்லத்தை (கருப்பட்டி) சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின்பு இறக்கி வடிகட்டி இளஞ்சூடாக அருந்த வேண்டும்.

0 comments:
Post a Comment