Friday, 23 March 2018

அகத்தியர் கூறும் கற்பம் உற்பத்தியாகும் ரகசியம்



ஆகனாள் விந்துவுண்டா யஞ்சானாள் கருப்போலாகிப்
போகமூ வஞ்சுநாழி(ளி)ல் பொருந்திய முட்டைபோல
மேகமாய்த் தீர்க்கமாகி யிரண்டினில் மார்மட்டாகிப்
பாகமா மூன்றாந் திங்கள் பகருந்தி மட்டுமாமே. (19)

மட்டுட னாலாந்திங்கள் வளர்ந்திட்டுப் பாதமெங்குங்
கட்டுட னஞ்சாமாதங் கருதுபூ ரணமா மாறில்
தட்டுட னெலும்புசீவன் தலையிர் நரம்புமேழில்
எட்டுட னறிவாமொன்ப தியல்தச பிறவியாமே. (20)

விளக்கம் :
கணவன்-மனைவி சேர்க்கைக்குப் பின்னர் 5-வது நாள் கருவானது நகரும்தன்மையை வந்தடையும். 15-வது நாள் முட்டைபோல் உருவாகும். நாட்கள் செல்லச் செல்ல இது நீண்ட வடிவத்தையடைந்து குழந்தைக்கு மார்பு உண்டாகிறது. 3-வது மாதம் வயிறு ஏற்படும். 4-வது மாதம் குழந்தைக்குக் கை, கால் உண்டாகும். 5-வது மாதத்திலும் மேல்கூறிய உறுப்புகள் நன்றாக வளருகின்றன. 6-வது மாதத்தில் எலும்பு, தலை, மயிர், நரம்பு முதலியவைகளுடன் 7-ஆம் மாதம் குழந்தைக்கு சீவனாகிய உயிர் உண்டாகும். 8-வது மாதம் குழந்தைக்கு அறிவு மற்றும் உணர்ச்சிகள் ஏற்படுகிறது. 9-வது மாதம் முதல் பிரஸவ காலமாகும். இந்த காலத்தில் அல்ட்ரா சவுண்ட் மற்றும் யு.எஸ்.ஜி. அலோகா மெஷின் கண்டுபிடிக்கும் கருவளர்ச்சியை, நம் முன்னோர் வாழ்ந்த காலத்தில் எந்த இயந்திரமும் இல்லாமலேயே கண்டுபிடித்தார்கள் என்பதை நினைக்கும்போது எவ்வளவு பெருமைக்குறியது.

Reference book : Agathiyar 2000 Part-I

0 comments:

Post a Comment