Monday, 26 March 2018

சுத்த சக்தி



சுவாசம் அல்லது மூச்சு என்பது உடலின் சகல இயக்கங்களுக்கும் ஆதாரமாயுள்ளது. மூச்சில்லாவிடில் உயிர் கிடையாது. மனித உடலாகிய இயந்திரம் - சிசுவாகப் பிறந்தது முதல் தொடங்கும் மூச்சு, அவன் இறக்கும் முன் இறுதியாக திணறும் மூச்சாகும் வரை ஊடாடிக் கொண்டிருக்கும். இதனையே சுத்த சக்தி எனவும் பிராணா எனவும் கூறப்படும். சாதாரணக் காற்றிலுள்ள இப்பிராண சக்தியினால்தான் சகல செயல்களையும் - சித்திகளையும் அடைய வியலும். எனவே, உடலை வளர்த்து, மூச்சுப்பயிற்சியின் மூலம் உயிரை வளர்த்தனர். மேலும் - பிரகிருதி சுபாவத்தில், இறப்பு என்பது மனித வாழ்வின் ஒரு முக்கியப் பகுதியாகக் கொள்வதில்லை. மனிதன் - காலங் காலமாகப் பழகி வரும் அறியாமையாலும், அச்சத்தாலும், தன்னைத்தானே தவறாகக் கருதுவதாலும் தான் மரணமடைகின்றான். ஆனால், சித்தர்களோ - உடலின் அணுத்திரள் சக்திகளை, தனது ஆன்ம சக்தியால் தகுந்தபடி மீண்டும் ஒழுங்கு படுத்துவதன் மூலம் நோயையும் - மரணத்தையும் வெற்றி கொண்டு, என்றும் நிலைத்திருப்பர்.


Reference book : Siddha Maruthuva Gurugulam

0 comments:

Post a Comment