மனிதனுக்கு வரும் பிணிகளை தீர்ப்பதற்கென தாவர தாது - சீவ இனங்களைக் கையாண்டு நலமுறும் வழிகளை வகுத்து உள்ளதே "மருத்துவம்" ஆகும். இங்கு மருந்து என்ற சொல் வலித்தல் விகாரம் பெற்று மருத்து எனவாகி அதனைக் கொண்டு புரியும் செயலையுணர்த்த மருத்துவம் என அமைந்தது. இச்சொல் நோயை மருத்தல் என்பதிலிருந்து பிறந்ததாகவும் கூறுவர். இதனை வைத்தியம் - சிகிச்சை - பரிகாரம் - மாற்று மருந்து - நீக்குகை - அகற்றல் எனவும் அழைப்பர்.
0 comments:
Post a Comment