Monday, 26 March 2018

அண்டமும்-பிண்டமும்



சித்தர்களின் கருத்துக்கள்

சித்தர்களது கருத்துக்கள் பலவாகும்.

அவை அண்டமும்-பிண்டமும்

வெளியுள்ள அண்டமாகிய இவ்வுலகத்திற்கும்-பிண்டமாகிய மனிதனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உண்மையில் மனிதன் அண்டத்தின் ஓர் சிற்றுருவமே தவிர வேறில்லை. எனவே, பிரகிருதியின் மூலப்பொருட்களினால், உடல் ஒரு பாகமாக ஏற்பட்டுள்ளது போல், அவனது ஆன்மாவும்-மனதும் உள்ளபடியே உடலில் ஒரு பகுதியாக உள்ளது அவன் தாதுக்கள்-த்துவங்களோடு அண்டத்தின் சிறு பாகத்தையும் கொண்டவனாகும். பஞ்ச பூதங்களே வெளி உலகிற்கும்-மனிதனுள்ளும் மூலக்காரணமாக உள்ளது. இவையே உலகத் தோற்றம், திதி, சங்காரம் இவற்றுக்கு ஏதுவாயுள்ளது. ஒவ்வொரு பூதமும், மற்ற பூதங்களுடன் கலந்துள்ளது. இவற்றின் இரகசியங்களையும், கோட்பாடுகளையும் அறிந்தவனால் ஒரு உலோகத்தை வேறொரு உலோகமாக மாற்றக்கூடும். ஏனெனில் சகலபொருளும் ஒரே ஆதி மூலப் பொருளினின்றே தோன்றியதாகும். எனவே ஏகபூதம்-கலப்பு பூதம் என்ற வேற்றுமையே கிடையாது. மேலும்-முக்குற்றங்களே உடலைமப்பிற்கும், பிணிகள் பற்றுவதற்கும் அடிப்படையாகும். வெளியுலகில் ஏதேனும் விகல்பம் தோன்றினால், மனிதனினுற்ற முக்குற்றத்திலும் இதே போன்ற விகல்பம் ஏற்படும். இந்த அண்டபிண்டக் கலப்புத் தொடர்புதான் முப்பிணிக் கொள்கைக்கும்-உடற் தத்துவ நூலுக்கும் மூலகாரணமாயுள்ளது. உண்மையில், உலகின் சகல பொருளிலும் முப்பிணியின் கலப்பு அதனதன் அளவிற்கேற்ப இருக்கவே செய்யும். மனிதனின் குணாதிசயங்களையும் இதன் செயலினின்று பிரிக்க முடியாது. (பஞ்சபூதங்களுள் முப்பிணி என்பது=காற்று-நெருப்பு-நீர் ஆகும். இதுவே, உடலின் வாத-பித்த-கபம் ஆகும்)


Reference book : Siddha Maruthuva Gurugulam

0 comments:

Post a Comment